அட கடவுளே- சுசானாவின் மகனால் ஆர்யாவுக்கு வந்தசோதனை!!

புதிதாக தொடங்கப்பட்ட தொலைகாட்சியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி தான் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. பழங்காலத்தில் எப்படி சுயம் வரம் என்கிற பெயரில் பெண்கள் ஆண்களை திருமணத்திற்கு தேர்வு செய்வார்களோ…

அதனை அடிப்படையாக கொண்டு சற்று வித்தியாசப்படுத்தி பெண்களின் திறமைகளையும், அவர்களுடைய ரசனையும் தனக்கு ஒத்து வருகிறாதா? என்பதை சோதித்து தன்னுடைய வருங்கால மனைவியை தேர்வு செய்து வருகிறார் நடிகர் ஆர்யா.

இறுதிக்கட்டம்:

கடந்த இரண்டு மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இந்த களத்தில் உள்ளனர். அதில் ஒருவர் திருமணம் ஆகி விவாகரத்தான இலங்கை பெண்சுசானா.

நேற்றைய தினம் ஆர்யா, சுசானாவின் மகன் நேடனை சந்தித்தார். ஆனால் ஒரு சில விஷயத்தில் நேடன் ஆர்யாவை அசிங்கப்படுதினார் என்பது இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். சுசானாவின் மகனால் அசிங்கப் படுத்தப்பட்டும் அதனை மிகவும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது ஆர்யாவின் பெருந்தன்மை என்று தான்கூற வேண்டும்.

16 பெண்களுடன் ஆர்யா:

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி, 16 பெண்களுடன் துவங்கியது. வாரம் இருவர் என இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி பெண்களை இழிவு படுத்தும் விதத்தில் உள்ளது என கூறி பெண்கள் அமைப்பை சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக நிகழ்ச்சியை விரைந்து முடிக்க நிகழ்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

இறுதி போட்டியாளர்கள்:

தற்போது இந்த நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக மூன்று பேர் உள்ளனர். அவர்கள் இலங்கை பெண் சுசானா, கேரளாவை சேர்ந்த ஆகாதா மற்றும் சீதா லட்சுமி ஆகியோர்.

குடும்பத்தினரை சந்தித்த ஆர்யா:

ஏற்க்கனவே இவர்களுடைய குடும்பத்தை சந்தித்து, அவர்களை பற்றி நன்கு தெரிந்துக்கொண்ட ஆர்யா, தன்னுடைய குடும்பத்தையும் இந்த மூன்று போட்டியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். தற்போது திருமணத்திற்காக தயாராகி வரும் இவர்களில் யாரை ஆர்யா திருமணம் செய்வார் என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது.

சுசான மகன்:

போட்டியாளர்களின் குடும்பத்தை சந்தித்து தன்னை பற்றி கூறிய ஆர்யா நேற்றைய தினம், சுசானாவின் மகன் நேடனை சந்தித்தார். ஒரு நாள் முழுவதையும் நேடனுடனே செலவிட்டார். ஆனால் நேடனுக்கு ஆர்யாவை பிடிக்காதது போல் அவரிடம் ஒட்டாமலே இருந்தார். இது ஆர்யாவை குட்டி பையன் நேடன், அசிங்கப்படுத்துவது போல் இருந்தது. ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல்… சிரிந்துக் கொண்டே புதிதாக பார்ப்பதால் இப்படி நடந்துக்கொள்கிறான் என தன்னுடைய மனதை சமாதானம் செய்துக்கொண்டார்.

நேடன் ஆர்யாவிடம் இப்படி நடந்துக்கொண்டுள்ளது சுசானாவிக்கு மிகப்பெரிய மைனஸ் என்றே சொல்லலாம். காரணம் தற்போது உள்ள போட்டியாளர்களை எந்த காரணத்தை வைத்து அவர்களை வெளியேற்றலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில்… இதனையே காரணமக காட்டி சுசானா வெளியேற்றப் படுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]