அட இவர் தம்பி ராமைய்யாவின் மகனா? இவருக்கு பிக்பாஸ் யாஷிகாவுடன் காதலா?

மைனா, கும்கி, சாட்டை, தனி ஒருவன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தம்பி ராமைய்யா.

தற்போது இவர் மணியார் குடும்பம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் இவரின் மகன் உமாபதி ராமையா ஹீரோவாக நடித்துள்ளாராம்.

பிக்பாஸ் யாஷிகாவுடன்

இந்த படந்தை மலேசியாவில் உள்ள அவரது தங்கை தான் தயாரிக்கிறாராம். இந்த படத்தின் திரைக்கதை, பாடல்கள், இசை , இயக்கம் என்று அனைத்தையும் தம்பி ராமைய்யா தான் மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸ் யாஷிகாவுடன்

மேலும், தம்பி ராமையா இயக்கும் மணியார் குடும்பம் படத்தில் யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில், இவருக்கும் உமாபதி ராமையாவிற்குமிடையே காதல் இருக்கிறது என ஒரு வதந்தி கிளம்பியது.

உமாபதி ராமையா 2016 ஆம் ஆண்டு வெளியான அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]