அட இவங்கதான் ஆர்யாவின் மனைவியா?? எங்க வீட்டு மாப்பிள்ளை கிளைமாகஸ் வீடியோ உள்ளே!!

பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆர்யா நடத்தி வந்த விறுவிறுப்பாக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஷோ நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இந்த ஷோவில் வெற்றி பெறும் பெண் தான் ஆர்யாவின் மனைவி என்று விளம்பரம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. எனவே ஆர்யாவை கைப்பிடிக்கும் அந்த அதிர்ஷ்டசாலி பெண் யார்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது.

மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொருவராக எலிமினேட் ஆகி கடைசியில் ஐந்து பெண்கள் தேர்வு ஆனார்கள். ஐந்து பேர்களின் வீடுகளுக்கும் ஆர்யா விசிட் அடித்தார்.

இந்த நிலையில் இந்த ஐந்து பேர்களில் மேலும் இரண்டு பேர் எலிமினேட் ஆக, நேற்றைய இறுதி நிகழ்ச்சியில் சுசானா, சீதாலக்ஷ்மி, அகதா ஆகிய மூன்று பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மூவரில் ஒருவர்தான் ஆர்யாவின் எதிர்கால மனைவி என்று இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவிலும் கூறப்பட்டது.

ஆனால் ஆர்யா மூவரில் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. இதற்கு அவர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு: என்னோட வாழ்க்கையை முடிவு செய்றதா அறிவிக்கப்பட்ட இந்த ஷோவுல, இவ்ளோ எபிசோடுகள் டெலிகாஸ்ட் ஆனதுல இருந்து என்னால டிசைட் பண்ண முடியலை. எனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுது.

அதுபோக, இந்த ஷோவுக்கு வந்த எல்லாருமே என்னைப் பிடிச்சு வந்தாங்க. என்னோட மனம் விட்டுப் பேசினாங்க. நானும் அவங்ககிட்ட உண்மையாகவே நடந்துக்கிட்டேன். ஸோ, அவங்க யாரையுமே நான் ஹர்ட் பண்ண விரும்பலை. அதனால, என்னோட மேரேஜ் பத்திக் கொஞ்சம் யோசிச்சு, கூடிய சீக்கிரமே சொல்லிடுறேன்!”என்று ஆர்யா கூறியுள்ளார்.

வெறும் பரபரப்பை ஏற்படுத்த மட்டுமே ஆர்யாவின் திருமணம் என்ற செய்தி இணைக்கப்பட்டதாகவும், இதுபோல்தான் நடக்கும் என்று தங்களுக்கு முன்பே தெரியும் என்றும் பல நெட்டிசன்கள் இந்த நிகழ்ச்சியை கலாய்த்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]