அட்லெடிகோ மாட்ரிட்டை ரொனால்டோவின் ஹட்ரிக் கோலால் வீழ்த்தியது ரியல் மாட்ரிட்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் அரைஇறுதியின் முதலாவது சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் “ஹாட்ரிக்’ கோலால் ரியல் மாட்ரிட் அணி 30 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது.’

அட்லெடிகோ மாட்ரிட்டை

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் மொனாக்கோ எப்.சி. (மொனாக்கோ), யுவென்டஸ் (இத்தாலி), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) ஆகிய 4 கிளப் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

ஒவ்வொரு அரைஇறுதியும் 2 ஆட்டங்களைக் கொண்டதாகும். 2 ஆட்டங்கள் முடிவில் கோல் வித்தியாசம் அடிப்படையில் முன்னிலை பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ரியல் மாட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தியது. 10ஆவது நிமிடத்தில் சக வீரர் கேஸ்மிரோஸ் தட்டிக் கொடுத்த பந்தை போர்ச்சுகலை சேர்ந்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட்) அபாரமாக தலையால் முட்டி கோலாக்கினார்.

32 வயதான ரொனால்டோ தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் 73 வது மற்றும் 86ஆவது நிமிடங்களிலும் கோல் அடித்து “ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக முறை (7 தடவை) ஹாட்ரிக் சாதனை படைத்து இருந்த லயோனல் மெஸ்சியின் (பார்சிலோனா அணி) சாதனையை ரொனால்டோ சமன் செய்தார்.

இந்த சீசனில் தொடர்ச்சியாக 2ஆவது முறையாக ரொனால்டோ “ஹாட்ரிக்’ கோல்களை பதிவுசெய்து இருக்கிறார். கால்இறுதியின் 2ஆவது சுற்றில் பெயர்ன் முனிச் (ஜெர்மனி) அணிக்கு எதிராக ரொனால்டோ தொடர்ச்சியாக 3 கோல்களை அடித்து அசத்தி இருந்தது நினைவிருக்கலாம்.

201213ஆம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் லீக் அரைஇறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோ இதுவரை 103 கோல்கள் அடித்து தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசிவரை போராடிய அட்லெடிகோ மாட்ரிட் அணியால் பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை. அந்த அணியினரால் ஒரே ஒரு முறை மட்டுமே கோல் இலக்கை நோக்கி பந்தை அடிக்க முடிந்தது. முடிவில் ரியல் மாட்ரிட் அணி 30 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை பந்தாடியது.

இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2ஆவது சுற்று ஆட்டம் மாட்ரிட் நகரில் வருகிற 10ஆம் திகதி நடக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]