அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன கைது

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் சரணடைந்தார்.

நீதிமன்றில் சரணடைந்த அவரை வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று பிற்பகல் கைது செய்தனர்.

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறு கோட்டை நீதிவான், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]