புதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க 

புதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க
எஸ்.எஸ். ரணசிங்க
புதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த புதிய நியமனத்துடன் ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க வைஸ் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]