அட்ஜஸ்ட் செய்யும் நடிகை

சென்னை: பிரபல நடிகை ஒருவர் ஹீரோவின் பெயரை கேட்ட பிறகே தனது சம்பளத்தை முடிவு செய்கிறாராம். இஞ்சி இடுப்பழகி என்று இந்த நடிகையை கூறலாம். வெயிட்டை ஏற்றாமல் சிக்கென்று உடலை வைத்துக் கொள்வதற்கு பெயர் போனவர். தற்போது தமிழ் திரையுலகின் பிசியான ஹீரோயின்களில் அம்மணியும் ஒருவர்.

நடிகை ஹீரோவுக்கு ஏற்றபடி சம்பளம் கேட்கிறாராம். படத்தின் ஹீரோ, இயக்குனருக்கு ஏற்ப தனது சம்பளத்தை கூட்டியும், குறைத்தும் கேட்கிறாராம். அதிகபட்சமாக அவர் கேட்கும் சம்பளம் ரூ. 1 கோடியை தாண்டுகிறது.

பிசியான நடிகை என்றாலும் சம்பள விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார். அதனால் தயாரிப்பாளர்களும் அவரை விரும்பி ஒப்பந்தம் செய்கிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]