அடுத்த வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் கலந்துரையாடப்படும்

அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின் கலந்துரையாடல்களில் அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய வரைவு, அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பு சபையின் இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்காக பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட அரசியல்யாப்பு வழிநடத்தல் குழுவின் கூட்டம் கடந்த எட்டாம் திகதி நாடாளுமன்றத்தில் உள்ள அரசியலமைப்பு செயலக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, வழிநடத்தல் குழுவின் நிபுணர்களது அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கை அனைத்து வழிநடத்தல் குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், அவை மீளாய்வு செய்யப்பட்டு, அடுத்த வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வழிநடத்தல் குழுவின் அடுத்த சந்திப்புக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]