அடுத்த பிரதமராவதற்கு தானே தகுதியானவர் என்கிறார் ஜோன் அமரதுங்க

ஜோன் அமரதுங்க

பிரதமர் பதவிக்கு தான் தகுதியானவர் என்று சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக கட்சியில் உள்ள சிரேஷ்ட அமைச்சர் தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வத்தளை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

எனினும், தான் பிரதமர் பதவியை கேட்கப் போவதில்லை எனவும் தனக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டாலும் அதனை ஏற்கமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]