அடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று கூறும் சுப்ரமணியன் சுவாமி

அடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று கூறும் சுப்ரமணியன் சுவாமி

அடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புது டெல்லி நகரை வந்தடைந்தார் என இந்திய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான கலாநிதி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் அழைப்பினை ஏற்று இன்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதி புது டெல்லி நகரை வந்தடைந்தார்.

அவர் 12 ஆவது இந்திய – இலங்கை உறவுகள் மற்றம் எதிர்கால நோக்கு தொடர்பிலான பகிரங்க கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.’ என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாட்கள் விஜயமாக இந்தியா சென்றுள்ளார்.

புது டெல்லி விமான நிலையத்தை சென்றடைந்த மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினரை பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான கலாநிதி சுப்ரமணியன் சுவாமி வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]