அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எனக்கு முடியும் – மஹிந்த

மஹிந்த

19ஆவது திருத்தச்சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தை பாதிக்காது என்றால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தனக்கும் தடையிருக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அவர், “2015 ஜனாதிபதி தேர்தலை 19 ஆவது திருத்தச்சட்டம் பாதிக்காது என்றால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டியிடத் தடையிருக்காது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க முடியும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்குமானால், நானும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் கூட அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]