அடுத்த உலக கிண்ணத்தை இலங்கை அணி வெல்வது கடினம் என்கிறார் அர்ஜுன ரணதுங்க

அடுத்த உலக கிண்ணத்தை இலங்கை அணி வெல்வது கடினம் என்கிறார் அர்ஜுன ரணதுங்க

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை இலங்கை கிரிக்கட் அணி வெல்வது கடினம் என முன்னாள் இலங்கை கிரிக்கட் அணித்தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களை சந்தித்த அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இலங்கைக் கிரிக்கெட்டின் இந்த நிலைக்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறியே காரணம். அவர்தான் ஒப்பந்தக்காரர்களை கிரிக்கெட்டுக்குள் கொண்டுவந்தார்.

கடந்த அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவர் சட்டத்தைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தி ஒப்பந்தக்காரர்களையும் சூதாட்டக்காரர்களையும் கிரிக்கெட் நிர்வாகத்தில் சேர்க்கவில்லை.

எமது வீரர்களை எம்மால் முன்னேற்ற முடியும். முதலில் யாப்பினை மாற்றிய பின்னர் தேர்தலை நடத்தவேண்டும். அது வரை தற்காலிக குழுவொன்றை நியமிக்கவேண்டும்.

அப்படி அமைக்க முடியவில்லை என்றால் முன்னாள் வீரர்களைப் பயன்படுத்தி இத்துறையினை சீரமைப்பதற்கு அரசாங்கமும் குறித்த அமைச்சும் முன்வரவேண்டும்.

ஊழல் நிறைந்ததாகக் காணப்படும் அமைச்சையும் எமது கிரிக்கட் அணியையும் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாகத் தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டார்.

அடுத்த உலக கிண்ணத்தை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]