அடுத்தவர்களையும் சேர்த்து கொல்லாதீர்கள்- ஆதங்கத்துடன் ஜானகி

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி. மழலை குரலுக்கு சொந்தக்காரரான இவர், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடியிருக்கிறார். தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.பிரபலங்களை பற்றி சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

ஜானகியை பற்றியும், அவரின் உடல்நிலை குறித்தும் பொய்யான செய்தி, கடந்த இரண்டு தினங்களாக பரப்பப்பட்டு வருகின்றன.

உண்மையில் அவர் நலமாக உள்ளார். “தன் மீது அதிக அன்பு கொண்டு அழுதபடி சிலர் போன் செய்து வருவதாகவும், மாரடைப்பு ஏற்படும் அளவுக்கு அடுத்தவர்களையும் சேர்த்து கொல்லாதீர்கள். வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்” என ஆதங்கத்துடன் வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார் ஜானகி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]