அடுத்தமாதம் டிரம்பை சந்திக்கிறார் ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிய முடிகிறது.

நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் அடுத்த மாதம் 12ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை 72ஆவது பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன் நிமித்தம் 19ஆம் திகதி ஜனாதிபதி அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியுடன், புதிய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழுவொன்றும் அமெரிக்கவுக்கு செல்லவுள்ளது.

2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு பின்னர் அவர் கலந்துகொள்ளும் மூன்றாவது பொதுச் சபைக் கூட்டத்தொடராக இது அமையவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட பல அரச தலைவர்களை சந்தித்து இதன்போது ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இதுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக சந்தித்து கலந்துரையாடவில்லை.

பொதுச் கூட்டத்தொடரேடு டிரம்புடன் அமையுள்ள கன்னிச் சந்திப்பில் இலங்கை அமெரிக்காவுக்கு இடையிலான அரசியல், சமூக, பொருளாதார உறவுகள் மற்றும் இராஜதந்திர நகர்வுகள் குறித்து ஜனாதிபதி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் கூட்டத்தொடரில் அமெரிக்காவின் இலங்கை அனுசரணையுடன் போர்க்குற்ற விசாரணை பொறிமுறையை இலங்கை கொண்டுவந்து வாக்கெடுப்பின்றி நிறைவேற்றியிருந்தது. அப்போதைய பரக் ஒபாமா தலைமையிலான அரசு இலங்கையின் போர்க்குற்ற விசாரணை பொறிமுறை குறித்து அதீத அக்கரை செலுத்தியிருந்தது. ஆனால், டிரம்ப் தலைமையிலான அரசு இதுவரை இலங்கை குறித்து தனது தெளிவாக நிலைப்பாட்டை வெளியிடவில்லை என்பது கோட்டிட்டு காட்ட வேண்டிய விடயமாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]