அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ், உற்சாகத்தில் ரெஜினா…

தமிழில் ‘கண்ட நாள் முதல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா காஸண்ட்ரா அதன் பின் ‘அழகிய அசுரா’, `கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘நிர்ணயம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனையடுத்து தமிழில் பெரிதாக படங்கள் அமையவில்லை.

அதன் பின்பு தெலுங்கில் சந்தீப் கிஷானுடன் இணைந்து நடித்த ‘ரா ரா கிருஷ்ணய்யா’ படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது இப்படத்தைத் தமிழில் ‘மகேந்திரா’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்கின்றனர்.

மாநகரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘சரவணன் இருக்க பயமேன்’, `நெஞ்சம் மறப்பதில்லை’,’சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’, ‘பார்ட்டி’ உள்ளிட்ட படங்களிலும், ராஜதந்திரம் முதலாம் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் நடித்தார்.

மேலும் ‘நட்சத்திரம்’ என்ற தெலுங்கு படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தெலுங்கில் மகேஷ் பாபு இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்த ‘ரா ரா கிருஷ்ணய்யா’ படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்வதால் மகிழ்ச்சியில் உள்ளார் ரெஜினா.

இதனால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்தி வருவதோடு அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாவதால் உற்சாகத்தில் இருக்கிறார் ரெஜினா.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]