அடர்ந்த காட்டில் பூச்சுக்கடிக்கு மத்தியில் பச்சிளம் குழந்தையை விட்டுச்சென்ற இரக்கமற்ற பெற்றோர்கள்..

தலைப்பை பார்த்தவுடன் பதறி இருப்பீர்கள் தானே? ஆம்…தலைப்புக்கு ஏற்ப நம்மை பதற வைக்கும் சம்பவம் ஒன்று பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன பிஞ்சுக் குழந்தை ஒன்று காட்டுப்பகுதியில் பூச்சிக்கடிக்கு மத்தியில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஓலங்கோ தீவில் அடர்ந்த வனப்பகுதி ஒன்று உள்ளது. அங்கு இருந்து குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டது. இதைக் கேட்ட அப்பகுதி பெண் ஒருவர் சத்தம் வந்த திசை நோக்கி தேட ஆரம்பித்தார்.

சற்றேறக்குறைய 35 டிகிரி உக்கிரமான வெயிலில் முகம் கருகிய நிலையில் கிடந்த குழந்தையை பார்த்து எடுத்தார் அந்த பெண். அந்த குழந்தை வீல்…வீல் என அழுதுகொண்டே இருந்தது. அப்பகுதியில் இருந்த தேவாலயம் ஒன்றின் மக்களும் ஓடி வந்து குழந்தைக்கு உதவி செய்தனர்.

உடனே போலீஸாருக்கும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, ஈவு இரக்கமற்ற அந்த பெற்றோரையும் தேடி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]