அடக் கடவுளே வேலைக்கு வராததால் இப்படியா கொடுமைபடுத்துவாங்க?? அதிர்ச்சி வீடியோ உள்ளே

மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் 5-6 நாட்களாக வேலைக்கு வராமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் குறித்த ஊழியரை வரவழைத்து திட்டி அடித்துள்ளதுடன் கட்டி வைத்து சவுக்கால் அடித்துள்ளார்.

இந்த நிலையில் ஊழியரை அடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஊழியரை பில்லரில் கட்டி வைத்து அடிக்கிறார். உரிமையாளரின் நண்பரும் உடன் இருக்கிறார்.

அப்போது, அந்த ஊழியர் விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டதால் 5-6 நாட்களாக வேலைக்கு வரமுடியவில்லை என்று கூறுகிறார்.

எனினும் அவர் கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ளாத உரிமையாளர், காலில் அடிபட்டால் என்ன, கூப்பிட்டால் வரமுடியாதா? என்று கேட்டு தொடர்ந்து அடிக்கும் காட்சிகள் குறித்த காணொளியில் அடங்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஊழியரை ஈவிரக்கமின்றித் தாக்கிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]