அடக்கடவுளே முன்னாள் பிரபஞ்ச அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன்!!

அடக்கடவுளே முன்னாள் பிரபஞ்ச அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன்!!

 

நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,
“6 மாதங்களுக்கு முன்பு நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது கூட்டத்தோடு கூட்டமாக ஒரு 15 வயது சிறுவன் என்னிடம் தவறாக நடந்து கொண்டான்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் அவனை கண்டுபிடிக்க முடியாது என்று அந்த பையன் நினைத்தான். பாடம் நான் அந்த பையனின் கையை பிடித்து இழுத்தவுடன் அவன் பயந்துவிட்டான்.15 வயது சிறுவன் என்பதால் அவன் மீது நான் எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை. பாவம் ஹலோ சொல்வது போன்று சிறுவனின் கழுத்தை பிடித்து கூட்டத்திற்கு முன்பு நடந்தேன்.

நீ செய்ததை இந்த கூட்டத்தில் உள்ளவர்களிடம் கூறினால் நீ காலி மகனே என்று அவனிடம் கூறினேன். அவனோ நான் எதுவும் செய்யவில்லை என்று சாதித்தான். தவறை செய்துவிட்டாய், ஒப்புக் கொள் என்று நான் அவனிடம் கூறினேன். மன்னித்துவிடுங்கள். இனி இப்படி செய்ய மாட்டேன் என்று சிறுவன் என்னிடம் கூறினான்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பொழுதுபோக்கு அல்ல என்று சிறுவனுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை.
10, 15 பாதுகாவலர்களுடன் செல்லும் நடிகைகள் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் பாதுகாவலர்களையும் தாண்டி பலர் சில்மிஷம் செய்கிறார்கள் ”என்றார் சுஷ்மிதா சென்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]