அடக்கடவுளே இதற்கெல்லாமா பத்திரிக்கை அடிப்பாங்க??? நண்பர்களால் மணமகனுக்கு ஏற்பட்ட விபரீதம்!!

திருமணம், நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, 60ஆம் கல்யாண விழா, ஓய்வு பெறும் விழா போன்ற விழாக்களுக்கு பத்திரிகை அடிப்பது வழக்கம். ஆனால் முதல்முறையாக முதலிரவுக்கு செல்லும் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கட்டில் விளையாட்டு விழா அழைப்பிதழை மணமகனின் நண்பர்கள் அடித்துள்ளனர்.

சினிமாவிலும் நிஜ வாழ்விலும் சரி எவ்வளவோ நண்பர்கள் திருமணதிற்கு வந்து செய்யும் ரகளைகளை நாம் பார்த்திருப்போம் ஆனால் இங்கு சில மணமகனின் நண்பர்கள் செய்த காரியம் இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்து மற்றவர்களும் இதே போன்று செய்யலாம் என ஆலோசனையில் உள்ளனராம்.

முதலிரவு குறித்த விஷயங்களை சம்பந்தப்பட்ட தம்பதிகளே அந்தரங்கமாக பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரத்தில் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் மணமகனின் நண்பர்கள் அடித்த இந்த கட்டில் விளையாட்டு விழா அழைப்பிதழ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த பத்திரிகை இணையத்திலும் பரவி வைரலாகியுள்ளதால் ஒருசிலர் இதனை ஜாலியாகவும், ஒருசிலர் இதற்கெல்லாமா பத்திரிகை அடிப்பார்கள் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]