அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் இரு நாள் வேலை நிறுத்தம்

அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் இரு நாள் வேலை நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்கள் நாடு தழுவிய ரீதியில் இந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெறும் என்று அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் (ருPவுழு) அரசாங்கத்தை எச்சரித்திருந்த நிலையில் தற்போது அவர்களது பணிப் பகிஷ‪;கரிப்பு இடம்பெற்று வருகின்றது.

ஒவ்வொரு அஞ்சலகங்கள் முன்னாலும் பூட்டப்பட்ட வாயிற் கதவடியில் வேலை நிறுத்தக் கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெறுவதாக அச்சங்கம் பொது அறிவிப்பைச் செய்துள்ளது.

இது விடயமாக சங்கம் வெளியிட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டப் கோரிக்கைகளில்@

12 வருடங்களாக நிகழும் அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கு,

5 வருடங்கள் கடந்த 2ஆம் வகுப்பு நியமனங்களை உடனடியாக உறுதி செய்,

கணினி தொழிநுட்பக் கோளாறுகளைச் சீர் செய்,

ஜனவரி 10ஆம் திகதி வாக்குறுதியளித்த கெபினெட் பத்திரிகைக்கு அனுமதி வழங்கி தீர்வைப் பெற்றுக் கொடு,

2012 பொறுப்புப் பரீட்சையை (Charge Exam) நடைமுறைப்படுத்து,

பொறுப்புக் கொடுப்பனவை ( In charge Duty Allowance) உடனடியாக வழங்கு,

விரிவுரையாளர் சம்பளத்தை புதிய சம்பளத்துக்கு பெற்றுக் கொடு,

பொறுப்புப் பரீட்சையில் சித்தியடைந்த 1ஆம் வகுப்பு உத்தியொகத்தர்களுக்கு எம்.என். (MN) 7 வேதன மட்டத்தைப் பெற்றுக் கொடு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தே இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாம் இது குறித்து ஏற்கெனவே போராட்டம் நடாத்த முற்பட்ட வேளையில் பேச்சுவாரத்தைக்கு அழைத்த அரசாங்க அமைச்சர், எமது போராட்டத்திற்குத் தீர்வாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனும் வாக்குறுதிகளைத் தந்திருந்தார்.

ஆனால், துரதிருஷ்டவசமாக நாம் பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குமாறு கோர அவர்கள் அதற்கான தீர்வாக தனியார் மயமாக்கலை முன்வைக்கின்றனர்.

இது மேலும் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.

அரசாங்கத்தின் மூடிய திணைக்கள ஆட்சேர்ப்பு முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகத்தி வாய்ந்த அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் வேலை நிறுத்தத்தால் நாட்டின் அஞ்சல் சேவை ஸ்தம்பித்துள்ளது.‪

இதேவேளை, தபால் திணைக்கள சேவை தொடர்பான யாப்பை மறுசீரமைத்து நடைமுறைப்படுத்தாமை தபால் திணைக்களத்தில் நீண்டகாலமாக நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படாமை போன்ற இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்மைப்பும் ஜூன் 12ஆம் திகதி தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

அஞ்சல் மற்றும் தொலைத்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]