அஞ்சலி மனதுக்குப் பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லையாம்!!!

அஞ்சலி மனதுக்குப் பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லையாம்!!! ஜெய்யும் அஞ்சலியும் காதலிக்கிறார்கள் எனச் செய்திகள் கசிந்துகொண்டே இருந்தது.இப்பொது தீடீரென்று அஞ்சலி கூறியதைப் பார்க்கும் போது அவர்களிடையே மனக்கசப்பு உள்ளதாக தெரிகிறது. அஞ்சலி

ஜெய் அஞ்சலிக்குத் தோசை சுட்டுக் கொடுத்த படமானது இணையதளங்களில் பரவி அவர்கள் காதலிப்பதை உறுதியாக்கும் வண்ணம் இருந்தது. அதுமட்டுமில்லை ஜெய்யின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அஞ்சலி மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.அஞ்சலி

அன்றைய தினம் ஜெய் அஞ்சலியை கல்யாணம் செய்யப்போவதாக சொன்னதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

அஞ்சலி அளித்த பேட்டி இதோ

அஞ்சலி திரைப்பயணம் எனக்கு நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. தற்சமயம், காதல் கல்யாணம் பற்றி சிந்திக்கவே எனக்கு நேரம் இல்லை என்றார். நான் இன்னும் என் மனதுக்குப் பிடித்தவரை பார்க்கவில்லை. தேடிக்கொண்டு இருக்கிறேன் எனவும் சொன்னார். எனக்கு இன்னமும் மனதுக்குப் பிடித்தவராக யாரும் கண்ணில் தென்படவில்லை. நாளையே அது போல ஒருவர் என் பார்வையில் பட்டால் நிச்சயம் அவரிடம் நான் என் காதலைச்சொல்வேன். என்னை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக ஜெய் சொன்னது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னையும் அவரையும் சேர்த்து வைத்து நிறைய செய்திகள் வந்து விட்டன. எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நம்மால் நிர்ணயிக்க முடியாது. எது எந்த நேரத்தில் நடக்குமோ அது அந்த நேரத்தில் நடக்கும் என நம்புகிறேன்.

நான் அரசியலுக்கு வரவிருப்பதாக சொல்வதில் உண்மை எதுவும் இல்லை. நான் டெல்லி சென்ற போது பாராளுமன்றத்தை சுற்றிப் பார்க்கச் சென்றேன். உடனே நான் அரசியலுக்கு வருவதற்கு இருப்பதாக வதந்திகளைப் பரப்பிவிட்டனர். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை.” என ஆணித்தரமாக சொன்னார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]