அஜீத் பிறந்தநாளான மே 1ம் தேதி மீண்டும் பில்லா படம் வெளியிடப்படுகின்றது!!

அஜீத் பிறந்தநாளான மே 1ம் தேதி ‘பில்லா’ படத்தை பிரபல திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

நடிகர் அஜீத்தின் பிறந்தநாள் மே தினமான 1ம் தேதி வருகிறது. அவரது பிறந்தநாளை ரசிகர்கள் எப்படி கொண்டாடப் போகின்றனர் என்று பலரும எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர். இப்போதே ரசிகர்கள் பல டாக்குகள் கிரியேட் உலகளவில் டிரண்ட் செய்து வருகின்றனர். ஒவ்வொரு மொழி எழுத்துக்களை வைத்தும் அஜீத் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் டாக்குகள் கிரியேட் செய்துள்ளனர்.

தற்போது என்னவென்றால் அஜீத் பிறந்தநாளுக்கு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ‘பில்லா’ படத்தை திரையிடவுள்ளனர். இந்தப் படம் மே 1ம் தேதி காலை 10 மணியளவில் திரையிடப்படுகிறது. அஜீத்தின் சினிமா பயணத்தில் ‘பில்லா’ படம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றே கூறலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]