அஜித் ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாளைக்கு ஓர் நற்செய்தி – என்னவென்று தெரியுமா?

தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது, துறையில் உள்ள சில பிரச்சனைகளை தீர்ப்பதற்காக முழு ஸ்ட்ரைக் அறிவித்து படப்பிடிப்பு, பட வெளியீடு, ப்ரமோஷன் என அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திவிட்டார்கள். சினிமா துறையில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக பங்கேற்று வரும் இந்த ஸ்ட்ரைக்கில், விஜய் 62, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், நாடோடிகள் போன்ற சில திரைப்படங்கள் மட்டும் படப்பிடிப்பை நடத்தினார்கள்.

இதை தெரிந்து கொண்ட சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள், இது குறித்து கேள்வி எழுப்பி வந்தார்கள். அதற்காக தயாரிப்பாளர் சங்கமும் தெளிவான விளக்கத்தை கொடுத்தது. இருந்தும் 23 ஆம் தேதி வரை செட் வேலைகளை மட்டும் விசுவாசம் படம் நடத்தி வந்தது.

அதன் பிறகு பட வேலைகளை அப்படியே போட்டுவிட்டார்கள். இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள். ஆனால் தற்போது அஜித் ரசிகர்களுக்கான ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. ஆம், அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அஜித்தின் விசுவாசம் படத்தின் 1st லுக் புகைப்படங்கள் வெளியாக உள்ளதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]