கலப்பு நீதிப் பொறிமுறையை அரசு ஒருபோதும் அனுமதிக்காது-அஜித் பி. பெரேரா

கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்று பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா நேற்று தெரிவித்தார்.

அஜித் பி. பெரேரா

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

மனித உரிமைகளை பாதுகாப்பதில் நல்லாட்சி அரசு வினைத்திரனுடனும், தீவிரமாகவும் செயற்பட்டுவருகின்றது. உள்ளகப் பொறிமுறைமீது அரசு நம்பிக்கை வைத்துள்ளது. நீதிக்கட்டமைப்பும் சுயாதீனமாக இயங்கிவருகின்றது. எனவே, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை அவசியமில்லை.

அதற்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தெளிவாக கூறியுள்ளனர். எனவே, யார் என்னசொன்னாலும் நாட்டுக்குள் வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சர்வதேசத்துடன் இன்று சிறப்பு நட்புறவை பேணிவருகின்றது அரசு. புல முன்னேற்றங்களை காண்பித்துள்ள, ஆகவே, அரசின் நிலைப்பாட்டைதான் சர்வதேசம் ஏற்கும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]