அஜித் பிறந்தநாளை ஒட்டி ஆர்யாவிற்கு இப்படி ஒரு சோதனையா??

அஜித் பிறந்தநாளை ஒட்டி, ஆர்யாவின் அறிவிப்பிற்கு ரசிகர்கள் செம கலாய் செய்துள்ளனர்.

நடிகர் அஜித் குமாரின் 47வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தொழிலாளர் தினத்தில் பிறந்த அஜித் குமாரை, அவரது ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தல பிறந்தநாளில் ஆர்யா பரிசு கொடுக்கப் போவதாக டுவிட்டரில் அறிவித்திருந்தார்.
அது, தனது கஜினிகாந்த் படத்தின் டிரைலரே ஆகும். இப்படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ளார். ஆர்யாவிற்கு ஜோடியக சயீஷா நடித்துள்ளார். அவரை டுவிட்டரில் குறிப்பிடும் போதெல்லாம், ஜூஸி என்று கூறுகிறார்.

இது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஒருவேளை அடல்ட் காமெடி படமாக இருக்குமோ என்று சந்தேகிக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு படத்தை தல பிறந்தநாளிற்கா வெளியிடுவது என்று கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

உண்மையில் கஜினிகாந்த் ஒரு காமெடி படம் மட்டுமே. இதற்கிடையில் கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவின் பெயர் ரஜினிகாந்த் என்பது தலைவர் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]