அஜித் பட டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்

அஜித் பட டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை தற்போது பாலியல் குற்றச்சாட்டுகள் ட்ரென்டாகி விட்டது போல. அதிகளவான பாலியல் புகார்கள் வெளியாகி வருகின்றது.

சுஜி லீக்ஸ் முடிந்த நிலையில், பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் புகார்களை முன் வைத்து சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், இலங்கை பெண்ணொருவர் தற்போது அஜித்தின் பல படங்களில் பணியாற்றியுள்ள முன்னணி டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதனை சின்மயி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சால்சா டான்ஸில் ஆர்வம் கொண்ட இலங்கை பெண் 2010ல் சென்னை வந்துள்ளார். டான்ஸ் க்ளாசில் அவர் கல்யாண் மாஸ்டரை சந்தித்தபோது, அவர், அவருடன் நடனம் ஆடுமாறு கேட்டுள்ளார்.

ஆடும்போது தகாத இடங்களில் கல்யாண் மாஸ்டர் தொட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியான அந்த பெண் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதனையடுத்து அன்றிரவே தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ள கல்யாண் மாஸ்டர் தன்னுடைய படுக்கைக்கு வந்தால் அசிஸ்டன்ட் கோரியோகிராபர் பணி தருவதாக கூறியுள்ளார்.

எனினும் குறித்த பெண் சினிமா துறையே வேண்டாம் என கூறியதாகவும், கல்யாண் மாஸ்டரால் தன் நடன கனவை தொலைத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]