அஜித் படத்தில் நானா? அதிர்ந்த நடிகை!!!

அஜித்

மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். ‘விஸ்வாசம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற வேலையில் தினம் தினம் சர்ச்சைகள் வந்த வண்ணமே இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22ம் தேதி தொடங்க இருக்கிறது.

பெரும் எதிர்பார்பைக் கிளம்பியுள்ள இந்த படத்தின் நடிகை யார்? இசையமைப்பாளர் யார்? என்பது குறித்து, அனைத்து தல ரசிகர்களும் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில், ‘மீசைய முறுக்கு’ நாயகி ஆத்மிகா ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. இதை கேட்டதும் தல ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளார்கள்.

இந்த வதந்தி அறிந்த ஆத்மிகாவும் அதிர்ச்சியடைந்துள்ளார். அஜித் படத்தில் நானா? என்ன? எப்படி? எப்போது? என டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். மிக விரைவில் இப்படத்தின் கதாநாயகி யார் என்பதை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரியில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 5 மாதம் நடைபெறுகிறது. படத்தினை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]