அஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்??

உசிலம்பட்டியில் நடிகர் அஜித்தை தவறாக பேசியதாக, அவரது ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. இப்படத்தின் ரிலீஸை ஒட்டி பல வன்முறை சம்பவங்களில் அஜித் ரசிகர்கள் சிலர் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தேறி இருந்தனர் .

இந்நிலையில் கடந்த 10ம் தேதி, உசிலம்பட்டியில் விஸ்வாசம் திரைப்படம் பார்க்க தியேட்டர் முன்பு, அஜித் ரசிகர்கள் கூடி இருந்த சமயத்தில், அஜித் குறித்து விஜய் ரசிகர்கள் சிலர் கேலி செய்ததாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த அஜித் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து, குறிப்பிட்ட விஜய் ரசிகர்களை துவம்சம் செய்தனர். இதில் தலையில் அடிபட்ட விஜய் ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்தார்.

உயிருக்கு போராடி வந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக ஒரு செய்தி வலம்வர துவங்கி இருக்கிறது. இதன் ஆதாரமாக வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில், விஜய் ரசிகர்களை கொடூரமாக தாக்கிய அஜித் ரசிகர்கள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]