அசோக்குமார் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி

அசோக்குமார் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி

அசோக்குமார்

இயக்குனர் சசிகுமாரின் மைத்துனன் அசோக் குமார் கந்துவட்டி காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

அசோக் குமாரின் வீட்டிலிருந்த 2 பக்க கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் பிரபல சினிமா பைனான்சியரான அன்புச்செழியனிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கி இருந்தது தெரிய வந்தது. இந்த கடனுக்காக சசிகுமாரும், அசோக்குமாரும் வட்டிக்கு மேல் வட்டி கட்டி வந்துள்ளனர். அதன் பின்னரும் அன்புச்செழியன் கூடுதல் வட்டி கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

அசோக்குமார்அசோக்குமார்

இதனால் கடந்த சில மாதங்களாகவே அசோக்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

கந்து வட்டி கொடுமை அதிகரிக்கவே அசோக்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அசோக்குமார்அசோக்குமார்அசோக்குமார்அசோக்குமார்அசோக்குமார்அசோக்குமார்

இதுபற்றி சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் 306 ஐ.பி.சி. (தற்கொலைக்கு தூண்டுதல்) சட்டப்பிரிவில் அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து அவரை பிடிப்பதற்காக தி.நகரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. பின்பு அவர் மதுரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் உடலுக்கு சினிமா பிரபலங்கள், சசிகுமாரின் நட்புவட்டாரங்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]