அசிங்கமான முகப்பரு தொல்லையால் அவதிப்படுபவர்களா நீங்கள்- இனி கவலைவேண்டாம் சூப்பர் டிப்ஸ்

முகப்பரு தொல்லை நீங்க :

அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது.

முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது.

மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும்.

1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும்.

பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.

எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.

பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும் துளசி இலைகளை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும் பின்பு காலையில் துளசி இலைகள் ஊறிய நீரை முகத்தில் தடவி அரைமணிநேரம் காய விட்டு பின்பு கழுவினால் முகம் பளபளப்பாகவும் இருக்கும் .இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் முக பரு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் . நல்ல பலன் கிடைக்கும்..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]