அசர்பஜானில் 5 இலங்கையர்கள் கைது

ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த 5 இலங்கையர்கள் அசர்பஜானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அசர்பஜானின் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் குடியேற்ற சேவைகள் பிரிவு என்பன இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அசர்பஜானில் இருந்து ஈரான் – துருக்கி வழியாக, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்துள்ளமை தெளிவாகி இருப்பதாக காவற்துறையினர் கூறியுள்ளனர்.

இதன்போது, அவர்களுடன் மேலும் சில வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் திகதியும் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் அசர்பஜானில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]