அசம்பாவிதம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு உடன் அழையுங்கள்……..

இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைதியின்மையை ஏற்படுத்துவோர் குறித்து அறிவிப்பதற்கு அரசாங்கத்தால் சேவை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையம் 24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைதியின்மையை ஏற்படுத்துவது தொடர்பில் திட்டமிடும் நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பில் 24 மணித்தியாலங்களும் இந்த சேவை நிலையத்தால் தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளது.

அதனூடாக குறித்த சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்புப் பிரிவின் பிரதானியின் அலுவலகத்தில் செயற்படவுள்ள இந்த அலுவலகத்திற்கு தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0711 261 261 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது [email protected] dgi.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்தும் தகவல்களை வழங்க முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]