அங்கொடை லொக்காவின் உதவியாளர் கைது

பிரபல பாதாள உலகக்குழு தலைவராக கருதப்படும் ‘அங்கொட லொக்கா’வின் உதவியாளர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளர்.

‘தெல்கஹவத்த சூட்டி’ என்ற பெயருடைய சந்தேக நபர் (41) இன்றுக் காலை அவரது வீட்டில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைதுசெய்த சந்தர்ப்பத்தில் அவரிடம் இருந்து கைகுண்டு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் கூறினர்.