அங்கீகாரம் கிடைக்க 12 வருடம் போராடினேன்: நடிகர் பிரேம்

‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனின் உயிர் நண்பன் சைமன் பாத்திரத்தில் நடித்து இருப்பவர் பிரேம்குமார். இவர் தனது திரை உலக பயணம் பற்றி கூறுகிறார்… “ சின்னத் திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த பிறகு 26 படங்களில் நடித்து இருக்கிறேன்.

‘விக்ரம் வேதா’ எனது 27-வது படம். இதுவரை 5-க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்து விட்டேன். இந்த படத்திலும் போலீஸ் வேடம் என்று இயக்குனர் ‌ஷங்கர் காயத்ரி சொன்னதால் முதலில் மறுத்தேன்.

அங்கீகாரம் கிடைக்க

பின்னர் யூனிபாம் போடாத போலீஸ் என்றதால் அரை குறை மனதுடன் கதைகேட்டேன். அப்போது அந்த சைமன் வேடத் தின் முக்கியத்துவம் தெரிந்தது. உடனே ஒப்புக் கொண்டேன். இந்த படத்துக்காக எனது ‘கெட்-அப்’பை ‘சத்யா’ கமல் போன்று இயக்குனர் மாற்றினார்.

அங்கீகாரம் கிடைக்க

கமலின் தீவிர ரசிகனான நான் அவரது கெட்டப்பில் நடித்ததும், அதற்கு பாராட்டுகள் குவிவதும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அங்கீகாரம் கிடைக்க 12 வருடம் போராடி இருக்கிறேன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]