தொண்டராசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் – அங்கஜன்

யாழ்ப்பாணம், நேர்முகத் தேர்வில் தோற்றிய அனைத்து தொண்டராசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நேர்முக தேர்விற்கு கோற்றிய அனைத்து தொண்டராசிரியர்களுக்குமான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதியுடனான சந்திப்பில் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் அதிமேதகு ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றினையும் சமர்ப்பித்துள்ளார். அத்துடன் பிரதமருக்கும் கோரிக்கை கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார். ஆந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடமாகாணத்தில் அரச பாடசாலைகளில் எந்தவித வேதனமுமின்றி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் 1060 தொண்டராசிரியர்கள் நேர்முகத் தேர்வில் தோற்றியுள்ளார்கள்.

குல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட தேர்வானது வாரியப்பத்திரத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டிற்கு முன்னர் 5 வருடங்களைப் பூர்த்தி செய்தவர்களுக்கே நடாத்தப்பட்டது.
நேர்முகத் தேர்வில் தோற்றிய 684 தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் பெறுவதற்கு தகுதியானவர்கள் என மத்திய கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், 182 தொண்டர் ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நியமனம் விரைவில் வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஓவ்வொரு பாடசாலைகளிலும் அதிபர்கள் பாடங்களிற்கு நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக தமது நிர்வாகத்தின் கீழ் மாணவர்கள் நல்ல பெறுபேற்றினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தகுதியான தொண்டர் ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து வந்தனர்.

தொண்டர் ஆசிரியர்கள் கற்பித்த காலத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் அரச நிர்வாக கொள்கைகளுக்கு அமைவாக நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
தற்பொழுது பாடசாலை சம்பவ திரட்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரச நிர்வாக கொள்கைக்கு அமைவாக உள்வாங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.