வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்கள் சேவையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள்

வடக்கில் நேர்முக தேர்விற்கு தோற்றிய தொண்டர் ஆசிரியர்களில் தகுதியானவர்களாக தெரிவு செய்யப்பட்ட 676 தொண்டர் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் திரு சிவஞனசோதி இன்று (27) உறுதிப்படுத்தி உள்ளனர்.

எனவே இவர்களின் சேவைக்காலங்கள் உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் எழுத்துப் பரீட்சை நடாத்தாமலும் சம்பவ திரட்டு புத்தகங்களின் பதிவுகள் இல்லாமலும் இவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட உள்ளன இதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதியின் செயலாளர் சிவஞனசோதி தயார்ப்படுத்திக்கொண்டு உள்ளார் என்றும் அடுத்த ஓரு வாரங்களுக்குள் அமைச்சரவை அனுமதியும் அதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் இவர்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]