அக்‌ஷரா அறிமுக காட்சியில் அரங்கம் அதிரும்!!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பற்றி கபிலன் வைரமுத்து கூறுகிறார்… “‘விவேகம்’ படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றி இருக்கிறேன். படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்றேன்.

நான் சிறப்பாக பணிபுரிய இயக்குனர் சிவா என் மீது நம்பிக்கை வைத்து முழு சுதந்திரம் தந்தார். அவரது தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் அவரை மேலும் பல உயரங்களுக்கு கொண்டு போகும். இந்த படத்தின் மூலமாக அஜித் சார் இடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

அவருடன் உரையாடியது ஒரு நல்ல புத்தகத்தை படித்த உணர்வை தந்தது. அவரது தொலைநோக்கு பார்வை, தொழில் பக்தி, உணவு பழக்க வழக்கம், கடுமையான உடல் பயிற்சி ஆகியவை அவர் மேல் நான் கொண்டுள்ள மரியாதையை மேலும் அதிகமாக்கியது. ‘விவேகம்’ படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். நான் எதிர்பார்த்த தை விட காட்சி அமைப்புகள் அருமையாக அமைந்து உள்ளன. அக்‌ஷரா ஹாசன் அறிமுக காட்சியில் அரங்கம் அதிரும்.

கமல் சார், திரையங்கில் அதை பார்த்தால் தன்னை மறந்து விசில் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதிரடி காட்சிகள், பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தாலும், மனித உணர்வுகள் தான் இந்த படத்தின் முக்கிய அம்சம். ரசிகர்களுடன் இணைந்து 24-ந் தேதி திரை அரங்கில் பார்க்க உற்சாகத்துடன் தயாராக இருக்கிறேன்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]