அக்காவை ஓரங்கட்டும் தங்கை? அப்ப அக்கா கேரியர்?

உலக நாயகனின் வாரிசுகளில் மூத்த மகள் சில ஆண்டுகளாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் எல்லாம் நடித்துவிட்ட அவருக்கு இப்போது கேரியரில் சின்ன பிரேக் விழுந்துள்ளது.

ஆனால் அந்த இடத்தை அவரது தங்கை நிரப்பி விடுவார் போல என்கிறார்கள். அக்காவுக்கு பெரிய மைனஸே அவரது குரல்தான்…

வெண்கலக் கடையினுள் யானை புகுந்தது போல எதிரொலிக்கும் குரலைக் கொண்டு சில படங்களில் டப்பிங் பேசியே தீருவேன் என்று அடம் பிடித்து பேச அப்போது துவங்கியது அஸ்தமன காலம்.

ஆனால் தங்கைக்கு அப்படி இல்லை. நல்ல குரல்வளம் இருக்கிறது. அக்காவை விட கலகலப்பாக இருக்கிறார். டென்ஷனே ஆவதில்லை. முன்னணி ஹீரோக்கள் சிலரின் பார்வை தங்கை மீது விழுந்திருக்கிறது. அப்ப அக்கா கேரியர்?

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]