அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மிருதி சுரேஸ்குமார்!

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுதர சாதாரண தரப்பரீட்சையில் யாழ்.வேம்படி மகளீர் கல்லூரி மாணவி தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்.வேம்படி மகளீர் கல்லூரியைச் சேர்ந்த மிருதி சுரேஸ்குமார் அகில இலங்கை ரீதியில்தமிழ் மொழி மூலம் முதலிடம் பெற்றுள்ளார்.

அந்த மாணவி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் வைத்தியராக வர வேண்டுமென்றே மாணவியின் கனவாக உள்ளது.

எமது பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு வைத்திய சேவையாற்ற வேண்டுமென்பதே இலக்காக உள்ளது. எனவே, அந்த இலக்கினை அடையயும் வரை எனது கல்வியில் நான் இன்னும் அதிக சிரத்தையுடன் கற்று எனது பாடசாலைக்குப் பெருமை சேர்ப்பேன்.

ஆத்துடன், எனது கற்றல் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக நின்ற எனது பெற்றோர்கள், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]