அகில இலங்கை தமிழ் மொழித்தின இறுதிப் போட்டிகளுக்கான அழைப்பு : 2017ஆம் ஆண்டு

2017 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ் மொழித்தின இறுதிப் போட்டிகள் யூலை மாதம் 9,15 மற்றும் 16ஆம் திகதிகளில் கொழும்பு 7 கொஃடி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் நடாத்த ஒழுங்குகள் கல்வி அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேற்படி சகல போட்டிகளும் உரிய தினங்களில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.

போட்டி தொடர்பான அறிவுறுத்தல்கள்

1.போட்டிகளுக்கு வருகை தரும் மாணவர்கள் பாடசாலை சீருடையில் மட்டுமே வருகை தரல் வேண்டும்.(இசையும்,அசைவும் தவிர)

2.போட்டிகளுக்கு வருகை தரும் மாணவர்களுடன் வரும் உதவியாளர்கள் கல்வி அமைச்சின் தமிழ் மொழி பிரிவால் குறிப்பிடப்படும் எண்ணிக்கு அமைய இருக்க வேண்டும்.மேலும் மாணவருடன் அனுப்பும் உதவியாளர்கள் தொடர்பாக முழு பொறுப்பையம் அதிபர் ஏற்க வேண்டும்.

3.போட்டிகள் யாவும் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.ஒவ்வொரு தினமும் பதிவுகள் யாவும் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும்.

4.உதவியாளர் தொகைக்குள் பொறுப்பாசிரியரும் அடங்குவர். உதவியாளர் மற்றும் பொறுப்பாசிரியரின் பெயர் பட்டியல் அதிபரால் அத்தாட்சிபடுத்தப்பட்டு அனுப்பப்படல் வேண்டும்.பெற்றோர்கள் சிறு குழந்தைகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

5.போட்டியாளர் தேசிய அடையாள அட்டை,அல்லது தபால் அடையாள அட்டையை கட்டாயமாக உடன் எடுத்து வரல் வேண்டும். அடையாளத்தை உறுதிப்படுத்தும் அவணமின்றி எந்த ஒரு மாணவரும் போட்டிகளிற் பங்குபெற அனுமதிக்கமாட்டார்கள்.

6.தங்குமிட வசதிகள் கொழும்பு 7 கொஃடி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.மேலதிக விபரங்களுக்கு ஜி.சடகோபன் (உதவி கல்விப் பணிப்பாளர் தமிழ் மொழி அலகு)அவர்களுடன் 0718429260 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை தொடர்பு கொள்ளவும்.

7.நடுவர்கள்,இணைப்பாளர்கள் தவிர்ந்த வேறெந்த நபரும் போட்டி நடைபெறும் மண்டபம் மற்றும் பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவோ காரணமின்றி நடமாடவோ அனுமதிக்கப்படமாட்டாது. அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே இருத்தல் வேண்டும்.

8.போட்டிகள் நடைபெறும் தினங்களில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மதிய உணவு சிற்றுண்டிகள் வழங்கப்படும்.

9.குழு நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் மாணவர்களும்,ஆசிரியர்களும்,தங்கும் பாடசாலையின் சுத்தம் மற்றும் பாடசாலையின் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்ளல் வேண்டும்.அதிபர் தத்தமது மாணவர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

இதுவரை கடிதங்கள் கிடைக்காத பாடசாலை அதிபர்கள் ஜி.சடகோபன் (உதவி கல்வி பணிப்பாளர் தமிழ் மொழி அலகு)அவர்களுடன் 0718429260 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]