அகழ்வு பணிகள் நிறுத்தம்

கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கம் காணப்படுவதாக தெரிவித்து இன்று காலை முதல் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் பொலிஸார், அதிரடிப்படை பாதுகாப்பில் குறித்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

இந்த வந்த நிலையில், தங்கம் கிடைக்காததால் பிற்பகல் 4.30 மணியளவில் அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தங்கம் வடக்கின் பல பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவ்வப்போது தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]