ஃபேஷன் உலகை அசத்தும் மச்சக்கன்னி!

முகத்தில் எந்த மாசு, மரு, தழும்பும் இல்லாமல் இருந்தால் மட்டுமே செல்ஃபி எடுப்பேன் என்று அடம் பிடிக்கும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பிறக்கும் போதே உடல் முழுவதும் 500க்கும் மேற்ப்பட்ட மச்சங்கள் மற்றும் தழும்புகளுடன் பிறந்த பெண் தற்போது மாடலாக அசத்தி வருகிறார்.

albaparejo albaparejo albaparejo ஸ்பெயினிலுள்ள பார்சிலோனாவில் பிறந்த அல்பா பரிஜோ (Alba Parejo) பிறக்கும் போதே Congenital Melanocytic Nevus என்ற குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் உடலில் எண்ணற்ற மச்சங்கள் மற்றும் தழும்புகள் ஏற்ப்பட்டன. ஐந்து வயதிற்க்குள்ளாகவே 30 அறுவை சிகிச்சை வரை மேற்கொண்டும் பலனேதும் இல்லை, நண்பர்கள் மத்தியில் கேலிக்கு ஆளாகி தனிமையில் அழுத அல்பா இப்போது பேஷன் ஐகான். ஏலியன்,பேய் என்று கேலி பேசியும் அருவருப்பு காட்டியவர்களுக்கு பாடம் புகட்டு வகையில் இதில் தன்னுடைய தவறு எதுவுமில்லை என்பதை உணர்த்த தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கதில் பகிரப்பட்ட அல்பாவின் போட்டோ பயங்கர வைரலாய் பரவியது.

அதோடு பார்சிலோனாவில் நடைப்பெற்ற முகம் மற்றும் உடலாற்றப் போட்டியிலும் வெற்றிபெற பிரபலமாகிவிட்டார் அல்பா. தன்னை இகழ்ந்த ஊரில் இப்போது செலிப்ரிட்டியாக வலம் வரும் அல்பா இந்த வெற்றி குறித்து கூறுகையில், பிறரது பாஸிட்டிவ் கமெண்ட்ஸ்களால் என் நோயை இப்போது நேசிகக் துவங்கிவிட்டேன். இப்போது என்னுடைய உடல் ஒரு அற்புதமாக தெரிகிறது சில கலைஞர்கள் என்னுடைய உடலை ஒரு ஓவியம் என்று வர்ணித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது அதோடு, இதுவரை பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நான், இதற்கு காரணம் என்னுடைய தோற்றம் தான் என்று என்னை மிகவும் வெறுத்தேன்.

ஆனால் இப்போது அந்தப் பிரச்சனை இல்லை.இதுவே என் அடையாளம் என்று இப்போது பெருமையடைகிறேன் என்றார். தோல் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், பிறருக்கு தன்னம்பிக்கை நாயகியாக ஜொலிக்கும் அல்பா நமக்கு உணர்த்தியிருக்கும் விஷயம் நிறை குறைகளுடன் உங்களை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள்! என்பதே.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]