ஃபிரீயா செக்ஸ் கொடுக்குறதா சொன்னாக் கூடத்தான் 50,000 பேர் வருவாங்க

ஜல்லிக்கட்டுக்கு தடையாக உள்ள பீட்டாவை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பலமாக வலுத்து வரும் நிலையில், பீட்டா அமைப்பின் ஆர்வலர் ராதா ராஜன்,நேற்று பிபிசி தமிழ் வானொலிக்கு பேட்டி அளித்தார்.அப்போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் கூடுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
petaindia

அதற்கு பதிலளித்த அவர், ”ஃபிரீயா செக்ஸ் கொடுக்குறதா சொன்னாக் கூடத்தான் 50,000 பேர் வருவாங்க.ஒரு பிரச்சனை வந்தா,அதுக்கு மக்கள் தெருவுக்கு வந்துதான் போராடனும்றது அவசியம் இல்லை.நம்ம நாட்டு பிரஜைகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவங்க.அதனால் சுப்ரீம் கோர்ட் சொன்ன தீர்ப்ப நாம மதிக்கணும்” என ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு தடையாக இருப்பதாக பீட்டா மீது ஏற்கனவே இளைஞர்கள் கடுப்பில் இருக்கும் இந்த நேரத்தில், பீட்டா அமைப்பின் ஆர்வலரின் இந்தக் கருத்து இளைஞர்கள் மத்தியில் மேலும் கோபத்தை தூண்டியுள்ளது.