ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வீரர் ரிஷப் பந்த் ஆட்டம் அதிரடியாக இருந்தது. 63 பந்தில் 128 ரன் குவித்தார்.
இதில் 15 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். நடப்பு தொடரில் 500 ரன்னை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை ரிஷப் பந்த் பெற்றார். அவர் 11 ஆட்டத்தில் 521 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஒரு சதம், 3 அரை சதம் அடித்துள்ளார். சராசரி 52.10 ஆகும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் 493 ரன்கள் (11 ஆட்டம்) எடுத்து 2-வது இடத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுல் 471 ரன்கள் (10 ஆட்டம்) எடுத்து 3-வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் 435 ரன்கள் எடுத்து 4-வது இடத்திலும், சென்னை அணி வீரர் அம்பதி ராயுடு 423 ரன்னுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]