2020 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் அமைப்பதே தமது கட்சியின் நோக்கம் என அந்தக் கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், கடந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், ஐக்கிய தேசியக் கட்சிக்கே அவர்கள் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வளர்ச்சிக்கு தேவையான சகல நடவடிக்கைகளும் தற்போது முன்னொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]