​”கடைக்குட்டி சிங்கத்தில்” ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ்

கடைக்குட்டி சிங்கம் குடும்பத்தை சேர்ந்த இக்குழந்தைகள் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல.உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த இக்குழந்தைகளை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

தனுஸ்ரீ தமிழ் குடும்பங்களின் செல்லபிள்ளை என்பதில் மாற்று கருத்து இல்லை.அதே போல் அவருடைய தம்பி தேஜ் தன் அக்காவுக்கு நிகரான திறமை கொண்ட வல்லவர் என்றே சொல்ல வேண்டும்.இவர்கள் விரைவில் வெளியாகவுள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ளனர்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.சூப்பர் சிங்கர் குடும்பத்தை சேர்ந்த பாடகியான தனுஸ்ரீயிடம் “கடைகுட்டி சிங்கம்” படத்தில் நடித்து பற்றி கேட்ட போது,கடைக்குட்டி சிங்கம் படத்தின் படபிடிப்பு தளம் ஜாலியாகவே இருந்தது .எல்லோரும் என்னை அன்பாக பார்த்துக்கொண்டார்கள்.சத்தியராஜ் அங்கிள்,கார்த்தி அங்கிள்,சாயிஷா ஆண்டி மற்றும் பிரியா ஆண்டி எல்லோரும் அவங்க குடும்பத்து குழந்தைகளாக பார்த்துக்கொண்டார்கள்.

கடைக்குட்டி சிங்கத்தில் கடைக்குட்டி சிங்கத்தில்

படபிடிப்பு தளத்தில் நான் சில நேரங்களில் பாடினேன், அதை பார்த்து எல்லோரும் எனக்கு முத்தம் குடுத்தார்கள்,ஆனால் இப்போதைக்கு நடிப்பு தான் எனக்கு முதலில் முக்கியமானது.நடிப்பில் தான் இப்போது எனது முழு கவனமும் இருக்கிறது .கடைக்குட்டி சிங்கம் படபிடிப்பு காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடக்கும்.சில நேரங்களில் இரவு தாமதமாக முடியும் ,மீண்டும் காலை சீக்கிரமாக படபிடிப்பு துவங்கும்.படபிடிப்பு தளத்தில் யார் அதிகமாக குறும்பு பண்ணுவார்கள்? என்று கேட்டபோது நம்மை இடைமறித்து தன்னுடைய தம்பிதான் அதிக குறும்பு செய்வான் என்றும் , நான் எப்போதும் அமைதியாக தான் இருப்பேன் என்றும் கூறினார். இசையமைப்பாளர் D.இமான் தனுஸ்ரீயை வருங்காலங்களில் தன்னுடைய இசையில் பாடவைப்பதாக கூறியுள்ளதாகவும்.

இந்த படத்தில் பாடாதது பற்றி தனக்கு வருத்தமில்லை என்றும் கூறினார் தனுஸ்ரீ. கடைசியாக நமக்கு “வா ஜிக்கி வா ஜிக்கி” பாடலை பாடி காண்பித்து கை தட்டல் வாங்கிய தனுஸ்ரீ தன்னை நன்றாக பாசத்தோடு கவனித்த சூர்யா , கார்த்தி மற்றும் பாண்டிராஜ் அங்கிளுக்கு நன்றி கூறினார்.​

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]