வெளிநாட்டு நாணய தாள்களுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு நாணய தாள்களுடன்

சட்டவிரோத வெளிநாட்டு நாணய தாள்களுடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 27 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நாணய தாள்களை சிங்கப்பூருக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் அடங்கிய பொதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரில் இருந்து மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு அனுப்பபட்ட உடைகள் அடங்கிய பொதியொன்றிலே ஹெரோயின் போதைப் பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பொதியை சோதனையிட்ட விமான நிலைய சுங்கத்தின் அஞ்சல் பொதி பிரிவு அதிகாரிகள், ஹொரோய்ன் போதைபொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட, விசாரணைகளின் போது, சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]