வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ் சிறைக் கைதிகள் அறுவர் விடுதலை

வெசாக்

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ் சிறைக் கைதிகள் அறுவர் விடுதலை

யாழ்ப்பாணம் – வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.பி பெரேரா தலைமையில் இன்று (29) யாழ்.சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

சிறு குற்றங்கள் பொலிஸாரினால் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, நீதிமன்றங்களினால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தினை செலுத்த முடியாமல் சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களே விடுதலை செய்யப்பட்டனர்.

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் வெசாக் தினத்தினை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் சிறு குற்றங்கள் புரிந்து சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் விடுவிக்கப்படுவது வழமை.

அதேபோன்றுஇன்று (29) யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த கைதிகள் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]