வில்ஸ்மித் நடனமாடிய ‘பிபா-2018 ஆன்தம்’-அதிகாரப்பூர்வ பாடல்- வீடியோ உள்ளே

ரஷ்யாவில் நடக்க இருக்கும் பிபா-2018 கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கான ஏற்பாடுகள் எல்லாம் தொடங்கி விட்டது. குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத ரஷ்யா, இந்த கால்பந்து தொடரை கோலாகலமாக கொண்டாட உள்ளது.

போட்டியிடும் 32 அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன.

நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே போகிறது. போட்டிகள் நெருங்கும் நாட்களில் வெளியிடப்படும் பிபா ஆன்தம், ரசிகர்களால் அடுத்த உலகக்கோப்பை வரை கொண்டாடப்படும்.

கடந்த 2010 ல் ஷகிராவின் “வாகா வாகா” பாடலும், 2014 ல் பிட்புல்லின் “வி ஒர் ஒன்” பாடலும் கால்பந்து ரசிகர்களிடையே இன்று வரை பிரபலம்.

2018 உலகக்கோப்பைக்கான பிபா ஆன்தம் – பாடல் வரி விடியோ சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில் இப்பாடலின் அதிகாரப்பூர்வ விடியோ நேற்று யூ-டியூபில் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது.

“லிவ் இட் அப்” (LIVE IT UP) எனும் இப்பாடலை அமெரிக்காவின் டிப்லோ தயாரித்துள்ளார்.

“ஒற்றுமை இருந்தால், வெற்றி நிச்சயம்” என்ற வாசகத்துடன் தொடங்கும் இப்பாடலில் ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித், முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டினோ உள்ளிட்ட பலர் துள்ளல் நடனமாடியுள்ளனர்.

ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள பிபா-2018 ஆன்தம் பாடல், உலகக்கோப்பை போட்டிகளின் எதிர்பார்ப்பை பன்மடங்கு எகிரச் செய்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]