விபத்தில் இளைஞன் பலி

இளைஞன் பலி

விபத்தில் இளைஞன் பலி

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் நாகொட பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் செலுத்திய மோட்டார் சைக்கிள் கட்டுப்பட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞன், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பிங்கிரிய, படிவெல பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக வசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]